புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 19 மாத இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்தாலும் அவரால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் 2011-ல் உலக கோப்பையை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார் அந்த தொடரில் தொடர்நாயகன் விருதையும் பெற்றார் யுவராஜ்சிங். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் இதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் உலக கோப்பை போட்டி வரை டோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்து இருந்தார்.
சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தடுமாறிய போது டோனி அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். ‘நீங்கள் அணியின் முக்கியமான வீரர்’ என்று அடிக்கடி சொல்வார். ஆனால் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த பிறகு அணியில் நிறைய விஷயங்கள் மாறியிருந்தன. விராட்கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்து இருந்தார். ஐ.பி.எல். ஆட்டங்களில் கூட அவர் நிறைய அணிக்காக விளையாடியுள்ளார். இந்திய அணியில் பஞ்சாப் அணி வீரர்கள் விளையாட விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.