Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Dhoni's signature on Gavaskar's shirt!! Video going viral on the internet!!

Dhoni's signature on Gavaskar's shirt!! Video going viral on the internet!!

காவஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்து!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி அவர்கள் சுனில் கவாஸ்கர் அவர்களின் சட்டையில் கையெழுத்து போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
நேற்று அதாவது மே 14ம் தேதி நடைபெற்ற கொல்க்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது.
நேற்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி லீக் போட்டி என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. இதில் சென்னை அணி கேப்டன் தோனி மற்றும் சென்னை அணி  வீரர்கள் ரசிகர்களுக்கு டி-சர்ட், பந்துகள் போன்றவற்றை பரிசளித்தனர்.
இதையடுத்து இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சுனில் கவாஸ்கர் அவர்கள் தோனியிடம் தன் சட்டை மேல் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து எம் எஸ் தோனி அவர்களும் லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் அவர்களின் சட்டையில் கையெழுத்திட்டார். சுனில் கவாஸ்கர் சட்டையில் தோனி கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Exit mobile version