Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய அணி தடுமாற்றம், உலக கோப்பை தொடரில் நீடிக்குமா இந்தியா?

Did India will sustain T20 WOrld cup series 2021?

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் ஆடிவருகின்றன.

இரு அணிகளும் தாங்கள் ஆடிய முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியிடம் தோல்வியற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த ஆட்டத்தை தொடங்கியுள்ளன. இதுவரை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில், நியூசிலாந்து அணியை வென்றதே இல்லை என்ற நிலையில், இந்த ஆட்டத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளது இந்திய அணி.

இந்நிலையில், துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்தஉ அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திணறி வந்த நிலையில் இந்திய அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இந்திய அணியில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் ஓப்பனராக களமிறங்கிய இஷான் கிஷன் 4 ரன்களுக்கு போல்ட் வீசிய பந்தில் அவுட் ஆகிய நிலையில், நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 18 ரன்களிலும், ரோகித் சர்மா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ஆடிய கேப்டன் விராட் கோலியும் 9 ரன்களில் இஷ் சோதி பந்தில் வெளியேற, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிசப் பண்ட் நிதானமாக ஆடிவந்தனர். இந்நிலையில் ரிசப் பண்ட் 12 ரன்களுக்கு மில்னேவிடம் விக்கெட்டை இழக்க, ஹர்திக் பாண்டியா 23 ரன்களுக்கு போல்ட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சர்துல் தாகூர் வந்த வேகத்திலே அவுட் ஆகி திரும்பினார். இந்நிலையில் ஜடேஜா 26 ரன்களுடனும், முகமது சமி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணியில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மில்னே மற்றும் சௌதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.

Exit mobile version