இந்திய அணியில் இடம் பெறவில்லை! முன்னாள் கேப்டன்கள் தான் காரணம்! அமித் மிஷ்ரா பேட்டி! 

0
187
Did not get a place in the Indian team! Former captains are the reason! Amit Mishra Interview!

 

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாதிக்க முடியாததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோஹ்லி மற்றும் எம்.எஸ் தோனி தான் காரணம் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

இந்திய அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா அவர்கள் இது வரை 22 டெஸ்ட் போட்டிகளிலும், 36 ஒருநாள் போட்டிகளிலும், 10 டி20 போட்டிகளிலும் விளையாடி மொத்தமாக 156 விக்கெட்டுகளை இருக்கின்றார். முன்னனி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அமித் மிஷ்ரா அவர்களால் ரவி அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா அவர்களின் சிறப்பான செயல்பாட்டினால் இந்திய அணியில் நீடித்து விளையாட முடியாமல் போனது.

உள்ளூர் தொடரான ஐபிஏல் தொடரில் டெல்லி, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகளுக்கு சிறப்பாக விளையாடிய அமித் மிஷ்ரா அவர்களுக்கு 41 வயது ஆகின்றது. இருப்பினும் இவர் தொடர்ந்து விளையாடி வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் இந்திய அணியில் நீடித்து இருக்க முடியாதது பற்றி அமித் மிஷ்ரா தற்பொழுது கூறியுள்ளார்.

இது குறித்து அமித் மிஷ்ரா அவர்கள் “இந்திய அணியில் வீரர்கள் அவர்களின் திறமையை பொறுத்து மட்டும் தேர்வு செய்யப்படுவது இல்லை. அணியின் கேப்டன்கள் தங்களுடைய விருப்பதற்கு ஏற்ப பிளேயிங் லெவனில் வீரர்களை தேர்வு செய்வார்கள். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த பொழுது எனக்கும் ரஜினிக்கும் நல்ல புரிதல் இருந்தது.

இருப்பினும் அந்த சமயம் ஏன் இந்திய அணியில் என்னால் விளையாட முடியவில்லை என்று கேட்டேன். இருப்பினும் காம்பினேஷன் சரியில்லை அது இல்லை இது இல்லை என்று கூறி மழுப்பி விட்டனர். அது மட்டுமில்லாமல் நான் எந்த கோரிக்கையும் அதாவது எனக்கு ஓய்வு வேண்டும் என்று கேட்காமலேயே எனக்கு அணியில் இருந்து ஓய்வு கொடுத்தார்கள்.

இருப்பினும் எந்தவித காரணமும் இல்லாமல் ஓய்வு கொடுத்தது குறித்து நான் அணியின் பயிற்சியாளர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்களோ சரியாக இருக்கும் பதில் அளிக்காமல் தோனியிடம் கேட்டு பாருங்கள் என்று கூறினர். அதே போல ஐபிஎல் தொடரில் விளையாடும் பொழுதும் நான் என்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேட்டேன். சரியான பதில் இல்லை.

அதன் பின்னர் 2016ம் ஆண்டு நான் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினேன். அதற்கு விராட் கோஹ்லி முக்கிய காரணமாக இருந்தார். மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த பொழுது நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன்.

இலங்கை நாட்டில் இருக்கும் பிட்சுகளை பொருத்த வரை லெக் ஸ்பின்னர்கள் தேவைப்பட்டனர். பின்னர் மீண்டும் இந்திய அணியில் இணைந்த பொழுது விராட் கோஹ்லி அவர்கள் என்னிடம் ‘என்னுடன் வந்து பயிற்சி செய்யுங்கள்’ என்று அழைத்தார். ஆனால் என்னால் அதிக எடையை தூக்கி உடல் பயிற்சி செய்ய முடியாத காரணத்தினால் நான் வேறு பயிற்சி செய்கின்றேன் என்று கூறினேன்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் விராட் கோஹ்லி அவர்களிடம் என்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு விராட் கோஹ்லி அவர்களும் எதுவும் கூறவில்லை. பொறுத்திருத்து பொறுமையை இழந்த நான் ஒரு கட்டத்தில் விராட் கோஹ்லிக்கு மெசேஜ் செய்து கேட்டேன். மெசேஜ்ஜை பார்த்த விராட் கோஹ்லி அவர்கள் பின்னர் சொல்கிறேன் என்று கூறினார். ஆனால் இன்று வரை எதுவும் கூறவில்லை” என்று அமித் மிஷ்ரா அவர்கள் கூறியுள்ளார்.