கமலுடன் கைகோர்க்கும் இயக்குனர் ஹெச்.வினோத்!! அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்!!
தமிழ் திரையுலகில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் ஹெச்.வினோத். இவர் மேலும் சில திரைப்படங்களான ஈமு கோழி, மல்டி லெவல் மார்க்கெட்டிங், பாதி விலைக்கு தங்கம், மண்ணுளி பாம்பு, இரிடியம் என மக்களை ஏமாற்றும் சில மோசடி சம்பவங்களை அடைப்படையாக வைத்து கதை எழுதியுள்ளார்.
மேலும் இவர் சுவாரஸ்யமாக கதை எழுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். இவரின் திறமையால் வெற்றிபெற்ற மற்றொரு திரைப்படம் தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “தீரன் ஆதிகாரம் ஒன்று”. இத்திரைப்படத்தில் நாடு முழுவதும் நிகழ்கின்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து விரிவாக காட்டியுள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பிறகு அஜித்தின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு முதலிய படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்க உள்ளார். மிகவும் குறைவான பட்ஜெட்டில் 35 நாட்களில் எடுக்க இருக்கும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.
இப்படம் தமிழகத்தின் பாரம்பரியமான நெல் விதைகள், அதில் பல்வேறு விதைகள் எவ்வாறு அழிந்தது, அதற்கு காரணம் யார் என்பதை மையமாகக் கொண்டு எடுக்க இருக்கிறது.
இதோடு சேர்த்து அரசியலையும் இயக்குனர் ஹெச்.வினோத் இத்திரைப்படத்தில் காட்ட உள்ளார். இத்திரைப்படத்தில் கமலின் பங்களிப்பு மிகுந்து காணப்படும் என்று கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கமல் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய அமைப்பின் நிர்வாகிகளை நேரில் அழைத்து பேசியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.