Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயம் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!! இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் உழைக்க வேண்டும்!!

Director Vetrimaran spoke about agriculture!! Everyone should work for organic farming!!

Director Vetrimaran spoke about agriculture!! Everyone should work for organic farming!!

விவசாயம் குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்!! இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் உழைக்க வேண்டும்!!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் ஆவார். இவர் ஆடுகளம், வட சென்னை, அசுரன் முதலிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூரியா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார்.

இவர் இயக்கி தற்போது வெளியான விடுதலை திரைப்படம் வெற்றி வாகையை சூடி உள்ளது. எனவே விடுதலை 2 திரைப்படத்தை சூரி நடிப்பில் இயக்க உள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்ப்பு எழுந்து வருகிறது.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் திரைப்படங்கள் பல ஹிட் ஆகியுள்ளது. இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் வீட்டிற்கு அருகே தனியாக ஒரு இடத்தில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் குறித்து பல இடங்களில் இவர் தனது கருத்துக்களைக் கூறி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் விவசாயம் குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறி உள்ளார்.

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்க விழாவில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறனிடம், விவசாயம் என்பது இப்போது பொய்யாகி விட்டது. இன்று நாம் விஷத்தை தான் சாப்பிட்டு வருகிறோம் இது குறித்து என்ன கூறுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய வெற்றிமாறன், இன்று பூச்சிக்கொல்லிகள், உரம் என்று எதுவும் இல்லாமல் அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியாது.

இன்றைய காலத்தில் இயற்கை விவசாயம் என்பது இல்லை. மாட்டுச்சாணி போட்டு இயற்கை விவசாயத்தை செய்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது எலைட் மக்களுக்கானதாக மாறி விட்டது.

அதை அனைவருக்குமாக மாற்ற வேண்டும். எனவே இதற்காக அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். அரசு நமக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே இந்த மாற்றத்தை காண முடியும்.

நிலத்திற்கு மருந்து போடுவதால் கெடுதல் என்று கூற முடியாது. அதே நேரம் மருந்து உபயோகிப்பதால் நல்லது என்று அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று இயக்குனர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.

Exit mobile version