மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்!! ஜூன் 30 கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!
மாணவ மாணவியருக்கான திறன் போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார். இது தொடர்பாக இவர் பேசி இருப்பது,
உலக அளவில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் வரும் 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள Lyon நகரில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு தொடக்க கட்டமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையாக அமைந்துள்ள மாவட்ட அளவிலான இந்த திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 30 ஆம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ள 1.1.1999 என்ற ஆண்டிலும், இதற்கு பிறகு பிறந்த ஆண்டிலும் இருக்கின்ற மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களாக இருக்க வேண்டும்.
இதில் 5 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள், இப்போது படித்துக் கொண்டே இருப்பவர்கள், தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், குறுகியகால திறன் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் இந்த திறன் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதைப் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ள மேற்கண்ட இணையதளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
இது குறித்து மேலும் தகவல்களை அறிய உதவி இயக்குனர், திறன் பயிற்சி அலுவலகம், காஞ்சிபுரம் அவர்களை நேரிலோ அல்லது (04429894560) தொலைப்பேசி எண் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.