கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
துபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டியில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வீரர் தலான் கிரீக்ஸ்பூரை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிக்.
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி சுற்று நேற்று நடைபெற்றது.
ஆண்கள் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் , தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டு போட்டியிட்டன.
இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-2 , 6-3 என்ற கணக்கில் இரண்டு சுற்றிலே கிரீக்ஸ்பூரை வென்றார்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
போட்டியை வென்ற பின் ஜோகோவிச் அளித்த பேட்டியில், கடந்த போட்டியில்
நான் வெற்றி பெற ரொம்பவே கஷ்டப்பட்டு விளையாடினேன், கடைசி 3,4 ஆட்டங்களில் நான் சிறப்பாக விளையாடவில்லை, இருந்தாலும் நான் சர்வீஸ் நன்றாக போட்டேன்.
ஆனால் இன்று நான் ஆரம்பத்தில் இருந்து நன்றாக விளையாட ஆரம்பித்தேன், போட்டியை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன் என ஜோகோவிச் கூறியுள்ளார்.