DMK ADMK: நாடாளுமன்ற தேர்தலில் என் வாக்கு இவருக்கு தான் – கருணாஸ் ஓபன் டாக்!!

0
127
DMK ADMK: Karunas Open Talk!!

DMK ADMK: நாடாளுமன்ற தேர்தலில் என் வாக்கு இவருக்கு தான் – கருணாஸ் ஓபன் டாக்!!

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரான கருணாஸிடம் தனியார் ஊடகம் ஒன்று பேட்டி ஒன்று எடுத்தது. அதில் தற்பொழுது உள்ள அரசியல் விவகாரம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி என்பது குறித்து பல கேள்விகளை முன் வைத்தனர். இதற்கு கருணாஸ் ஒன்றன்பின் ஒன்றாக தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அந்த வகையில் முதலில் அவர் கூறியதாவது,இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தால் சீட்டு கிடைக்கும் என்ற எண்ணத்தில் நான் இல்லை குறிப்பாக மக்கள் பாமக, புதிய தலைமுறை போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பது போல் தங்களுக்கு கொடுப்பதில்லை.எனவே இது குறித்து இளைஞர்களிடம் எழுச்சி செய்ய வேண்டும்.

இதேபோல நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியுடன் நின்றதால் வெற்றி பெற முடியும் என்றெல்லாம் இல்லை நான் நினைத்தால் தனியாக கூட நிற்க முடியும். இந்த தமிழக அரசியலில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜக வரக்கூடாது. அவர்களால் உண்டான அவல நிலை ஏராளம்.

இதனை தடுக்க திமுகவிற்கு கூட நான் எனது ஆதரவாளர்களை ஓட்டு போட சொல்ல நேரிடும். இவ்வாறு அவர் கூறியது நாடாளுமன்ற தேர்ர்தலில் திமுக-வுக்கு தான் எனது ஓட்டு என்பதை நேரடியாக கூறியதை போல இருந்தது.மேலும் அவர் பேசுகையில்,நான் திமுகவிற்கு ஓட்டு போட கூறுவதால் ஒரு பொழுதும் திமுக செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க மாட்டேன். அதேபோல அதிமுகவிலிருந்து என்னை யாரும் வெளியேற்ற வில்லை நானாகவே தான் வெளியேறினேன்.

வெளியே வந்தவுடன் திமுகவுடன் இணைந்து நிற்க சீட்டு கேட்டேன் ஆனால் தர மறுத்து விட்டது. திமுக என்றாலே குடும்ப ஆட்சி தான் எப்பொழுதும் அது மக்களுக்கானதாக இருக்காது. பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். மகளிருக்கு ஆயிரம் வழங்கிவிட்டு ஆயிரத்து எட்டு விதிமுறைகளை புகட்டுகிறது.

அதேபோல நன்றாக இருக்கும் கட்டிடங்களை எடுத்துவிட்டு புதிதாக கட்டுவதால் என்ன பயன் உள்ளது. இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு கமிஷன் தான் கிடைக்கும் என்று வெளிப்படையாகவே திமுகவைச் சாடினார். மேலும் சினிமா துறையில் அரசியல் எந்த அளவிற்கு நுழைந்துள்ளது என்பது குறித்தும் தெரிவித்தார்.

முதல்வரின் மகன் என்ற அதிகாரத்தால் சிறு தயாரிப்பாளர்கள் பெருமளவு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். முதல்வரின் மகன் மற்றும் அமைச்சர் என்று பலர் அவர்களுக்கு தான் முன்னுரிமை அளித்து வருகின்றனர். அதேபோல பலரிடமிருந்து இந்த திரைப்படங்களை நாங்கள் தான் திரையிடுவோம் என்று ரெட் ஜெயன்ட் மிரட்டுவதாக கூறுவது சுத்தமான பொய் என்றும் ஒரு பக்கம்  முட்டுக்கொடுத்து கருணாஸ் பேசினார்.

மேற்கொண்டு அண்ணாமலை பற்றி பேசுகையில், படித்துவிட்டாள் புத்திசாலி என்று நினைத்து பேசுவதெல்லாம் ஒரு பேச்சே கிடையாது. அந்த வகையில் எனக்குப் பிடிக்காதவர்களை பற்றி எந்த கருத்தையும் நான் சொல்வதில்லை என தெரிவித்து முடித்துக் கொண்டார். இவர் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.