“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!!
நடிகர் மற்றும் திமுக அமைச்சருமான உதயநிதி அவர்கள் நடித்த மாமன்னன் திரைப்படம் ஆனது திரைத்துறையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. உதயநிதி இதில் நடித்துள்ளதால் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் தினம்தோறும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எத்தனை முறை திரையரங்கிற்கு சென்றாலும் உதயநிதி பெயரை சொல்லியும் மேலும் திமுக உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் பெயரை சொல்லியும் இலவசமாகவே படம் பார்த்து சென்று விடுகின்றனர்.
இது ஓர் புகாரகவே இருந்து வரும் பட்சத்தில்,தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் பெயரை கூறி திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகி வில்சன் இருவரும் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் டிக்கெட்டுக்கு பணம் கட்டாமல் இலவசமாக படம் பார்த்ததோடு மேலும் அங்கிருந்த கேண்டினில் இலவச பாப்கான் கேட்டு சண்டையிட்டுள்ளனர்.
திரையரங்கு ஊழியர்கள் மற்றும் திமுக அதிகாரிகளின் வாக்குவாதத்தால் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். வாக்குவாதத்தை தடுக்கும் பொழுது திமுகவினர் போலீஸ் என்று கூட பாராமல் அவர்களையும் கொச்சையாக பேசியுள்ளனர். உடனடியாக திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகி வில்சன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோவும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்த வீடியோவை வைத்து சர்ச்சையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகளுடன் உடனிருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இவ்வாறு திமுக நிர்வாகிகள் அமைச்சர் பெயரை உபயோகித்து ரவுடிசத்தில் ஈடுபடுவதை பொதுமக்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.