Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“என் வீடியோ என் ஆடியோ” ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் திமுக!! அண்ணாமலையின் பதில் என்ன??

DMK working on "En Video En Audio" sketch!! What is Annamalai's answer??

DMK working on "En Video En Audio" sketch!! What is Annamalai's answer??

“என் வீடியோ என் ஆடியோ” ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் திமுக!! அண்ணாமலையின் பதில் என்ன??

அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் நோக்கோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை ராமேஸ்வரத்தில் நடைபயணம் துவங்க இருக்கிறார்.

பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நடைப்பயண விழாவிற்கு மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 168 நாட்கள் கொண்ட இந்த பாத யாத்திரையானது ராமேஸ்வரத்தில் தொடங்கி சென்னையில் முடிவடைய இருக்கிறது.

“என் மக்கள், என் மண்” என்ற தலைப்பில் தொடங்க இருக்கும் இந்த நடைபயணத்தின் போது மோடியின் மக்கள் சேவைகளை பற்றி அண்ணாமலை கூற இருக்கிறார்.

இவர் பாத யாத்திரை எப்போது செல்வார் என்று காத்திருந்து தற்போது திமுக பாஜகவிற்கு எதிரான ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது பாஜக வில் சில நாட்களுக்கு முன்பாக சர்ச்சையான வீடியோ மற்றும் ஆடியோ ஒன்றை தற்போது #என் வீடியோ என் ஆடியோ என்பதை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கேடி ராகவன் ஒரு பெண்ணிடம் தவறாக பேசிய வீடியோ ஒன்றும், இது குறித்து அண்ணாமலை பேசிய ஆடியோ ஒன்றும் வெளியானது. இது குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது அவர் எதுவும் பதில் அளிக்கவில்லை.

இதன பிறகு கெடு ராகவன் கட்சி பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டார். இதனையடுத்து இதற்கு அண்ணாமலை செய்தியாளர்களிடம் விளக்கமும் கொடுத்து விட்டார்.

ஆனால் தற்போது சர்ச்சையான அந்த வீடியோவையும், ஆடியோவையும் திமுக வினர் வேகமாக பரப்பி வருகின்றனர். இந்த சர்ச்சை செய்திகள் அண்ணாமலையின் பாத யாத்திரையில் இடையூறு விளைவிக்குமா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version