Septic tank சுத்தம் பண்றீங்களா?? இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!!
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கின்றனர்.
எவ்வாறு அழைக்கப்படும் இந்த தூய்மை பணியாளர்கள் யார் என்று தெரியுமா நீங்கள் தினந்தோறும் போடும் குப்பைகளையும் சுத்தம் செய்வதற்கே அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தான் இவர்கள்.
கொரோனா காலகட்டத்தில் நம் வீட்டில் இருக்கும் ஒருவரின் உடமைகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தொடுவதற்கு தயங்கினோம் ஆனால் அந்த சூழலில் கூட எதையும் பொருட்படுத்தாமல் நம்முடைய நலனுக்காக இந்த நாட்டையே தூய்மை செய்தவர்கள் தான் தூய்மை பணியாளர்கள்.
இப்படி பல நன்மைகளை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு மிஞ்சியது ஒன்றுமே இல்லை.இது மட்டுமல்லாமல் வீடுகள் அலுவலகங்கள் நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் உள்ள சாக்கடை கால்வாய்களை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்கின்றனர்.
மனித கழிவுகளை அகற்றும் மனிதர்களையே பயன்படுத்தும் இந்த அவல நிலை எப்பொழுது நம் நாட்டை விட்டு நீங்கும் என்று தெரியவில்லை.
அந்த வகையில் இந்த சாக்கடைகளை சுத்தம் செய்யும் மனிதர்கள் பெரும்பாலானோர் விஷ வாயு தாக்கப்பட்டு உயிரிழந்து கொண்டே வருகின்றனர். இதுபோன்ற துயர சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றது.
இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு ஒருவர் விஷவாயு தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ஆனால் அதுதான் உண்மை இதனை தேசிய தூய்மை பணியாளர் நல வாரிய வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்தது.
இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 56 பேர் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 63 பேர் விஷவாயு தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு கையால் கழிவு அகற்றும் மறுவாழ்வு மற்றும் நல வாரிய சட்டம் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டது.
இதன் மூலம் எந்த ஒரு பணியாளரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆபத்து தரும் வகையில் உள்ள தொட்டிகளுக்குள் இறக்க கூடாது என்றும் அதை மீறி பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுவே அவர்களை பணியில் ஈடுபடுத்தி அவர்கள் உயிரிழந்தார் என்றால் அந்த ஒட்டுமொத்த நிறுவனத்தின் மீதும் அந்த நபரின் மீதும் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டு உயிரிழந்த அந்த பணியாளரின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது 2023 ஆம் ஆண்டு கழிவு நீர் தொட்டிகளை சுத்தப்படுத்த லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த லாரிகள் முறையாக நல வாரியத்தில் ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும் மற்றும் இது ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
இதன் மூலம் கழிவுகள் முறையான இடத்தில் அகற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள்.
உங்களுக்கு இது போன்ற லாரிகள் வேண்டுமென்றால் 14420 என்ற எண்ணிற்கு அழைத்து உங்களது கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்து கொள்ளலாம். மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அப்படி சுத்தம் செய்ய வரும் நபர்கள் ஆறு வகையான பாதுகாப்பு உடைய அணிந்திருக்க வேண்டும் அதை மீறி பணியில் ஈடுபட்டால் ரூ. 50000 அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்களாகிய நீங்கள் ஒருபோதும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் செய்யும் இந்த சிறிய மாற்றத்தால் இனி தமிழகத்தில் ஒரு மலக்குழி மரணம் கூட நடக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.