Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குக் வித் கோமாளி வெற்றியாளர் யார் தெரியுமா?? இணையத்தில் கசிந்த உண்மை!!

Do you know who is the winner of Cook With Clown?? The truth leaked on the Internet!!

Do you know who is the winner of Cook With Clown?? The truth leaked on the Internet!!

குக் வித் கோமாளி வெற்றியாளர் யார் தெரியுமா?? இணையத்தில் கசிந்த உண்மை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இதற்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசனும் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது.

இதன் இறுதி போட்டிக்குள் விசித்ரா, சிருஷ்டி, மைம் கோபி, கிரண், ஷிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான இறுதி சுற்று இன்னும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை.

இந்த வார இறுதியில் வெளியாகும் என்று எதிரப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது குக் வித் கோமாளியின் இந்த இறுதி சுற்றில் வெற்றி பெற்றவரின் தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்த சீசனின் வெற்றியாளர் மைம் கோபி தான் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், இரண்டாவது இடத்தை சிருஷ்டியும், மூன்றாவது இடத்தை விசித்ரா ஆகியோரும் பிடித்துள்ளதாக தகவல் இனையத்தில் பரவி வருகிறது.

இந்த குக் வித் கோமாளியின் நான்கு சீசன்களில் முதல் முறையாக ஒரு ஆண் வெற்றி பெற்றுள்ளார் என்பது சிறந்த ஒரு பதிவு ஆகும். எனவே, சமூக வலைதளங்களில் மைம் கோபி தான் வெற்றியாளர் என்று தகவல் பரவி வருகிறது ஆனால் இது உண்மையா என்பதை தொலைக்காட்சியில் பார்க்கும் போதுதான் தெரியவரும்.

இதனைத்தொடர்ந்து இறுதி சுற்று முடிவடைந்து விட்டதாகவும், இந்த நிகழ்ச்சி வாழ்க்கையில் மறக்க முடியாத பல்வேறு அனுபவங்களை தந்திருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த சிவாங்கி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறி இருக்கிறார்.

Exit mobile version