பாத்ரூம் ஐ சுத்தம் செய்ய வேண்டும் என்றாலே கடுப்பாகிறதா..?? இந்த ஒரு பொடி இருந்தால் போதும் வேலை ஈஸி ஆகிவிடும்..!!

Photo of author

By Janani

பாத்ரூம் ஐ சுத்தம் செய்ய வேண்டும் என்றாலே கடுப்பாகிறதா..?? இந்த ஒரு பொடி இருந்தால் போதும் வேலை ஈஸி ஆகிவிடும்..!!

Janani

நமது வீட்டில் இருக்கும் குளியலறை மற்றும் கழிவறையை என்னதான் தேய்த்து தேய்த்து கழுவி சுத்தம் செய்தாலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் உப்பு கரை படிந்து விடும். சலிப்பு தட்டி இரண்டு நாட்கள் கழிவறையை கழுவாமல் விட்டு விட்டோம் என்றால், அது மேலும் சிரமத்தை கொடுத்து விடும். உப்பு கறைகள் மற்றும் அழுக்குகள் அதிகமாக படிந்து விடும். அதனை தேய்த்து எடுப்பதற்குள் கை வலியே வந்துவிடும்.

இவ்வாறு கடினமாக உழைத்து கழிவறையை கழுவாமல், எளிதான முறையில் கை வலிக்காமல் கழுவலாம். அதற்கான டிப்ஸ்களை தான் தற்போது காணப் போகிறோம். இதன் மூலம் கழிவறையில் உள்ள டைல்ஸ், பைப், பாத்ரூமில் பயன்படுத்தும் வாளி இதுபோன்ற அனைத்தையும் பளிச்சென்று மாற்றி விடலாம்.

ஒரு சிறய பாத்திரத்தில் முக்கால் பாக்கெட் கோலமாவு சேர்க்க வேண்டும். இத்துடன் கால் கப் அளவில் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்தப் பொடியை கொண்டு கழிப்பறையில் இருக்கும் டைல்ஸை சுத்தமாக கழுவி விடலாம்.

இப்போது, கழிவறையில் இருக்கும் பைப் உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்துவதற்கான பொருளை தயார் செய்யலாம். அதன்படி, பல் தேய்ப்பதற்கு பயன்படும் பேஸ்டை சிறிதளவு எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாறை பிழிந்து நன்றாக கலக்க வேண்டும். இதனைக் கொண்டு இரும்பு பைப்பை ஈசியாக க்ளீன் செய்ய முடியும்.

இதையடுத்து, நாம் முதலில் தயாரித்து வைத்திருந்த பொடியை, கழிப்பறையில் டைல்ஸ் முழுவதும் தூவி விட வேண்டும். குறிப்பாக, இந்தப் பொடியை தூவதற்கு முன்பாக டைல்ஸ்கள் அனைத்தும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். இதன் பின்னர், பொடியை துவியதும் 5 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விட வேண்டும்.

இதன் பின்னர், சிறிது தண்ணீர் தெளித்து துடைப்பம் கொண்டு டைல்ஸை சுத்தம் செய்யலாம். இந்தப் பொடியை பயன்படுத்தியதால், அதிக அழுத்தம் கொடுத்து தேய்த்து கழுவ வேண்டிய அவசியம் இருக்காது. லேசாக தேய்த்து கழுவினாலே அழுக்கு முற்றிலும் போய் விடும்.

இறுதியாக, பைப்பை சுத்தம் செய்ய தயாரித்து வைத்திருந்த பேஸ்ட் மூலம் அதனையும் க்ளீன் செய்யலாம். இப்படி செய்வதனால் உப்புக் கறை முற்றிலும் காணாமல் போய்விடும். கழிப்பறையும் பளிச்சென சுத்தமாகி விடும்.

இந்த எளிமையான டிப்ஸ்களை பின்பற்றி நம் வீட்டு கழிப்பறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நம்மால் பராமரிக்க முடியும். நீண்ட நேரம் கை வலிக்க கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்காது. இதனால் நேரத்தையும் மிச்சம் செய்யலாம்.