உடம்பில் ஏற்பட்ட கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா??இதை செய்து பாருங்கள்!!
மனிதனின் உடலில் உள்ள உறுப்புக்கள் இயங்குவதற்கும் உடலின் சில அத்தியாவசிய தேவைகளுக்கும் கொழுப்பு சத்து அவசியம். நாம் உண்ணும் பல வகையான உணவுகளில் இந்த கொழுப்பு சத்து அதிகமுள்ளது.
இந்த கொழுப்பு ஒருவரின் உடலில் அளவுக்கதிகமாக சேர்ந்து விட்டால் பல நோய்களை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் உடலின் தோலுக்கு அடியில் ஏற்படும் கொழுப்பு கட்டி. பொதுவாக கொழுப்பு கட்டி தோலுக்கும், தசைக்கும் இடையில் வளரும்.
இது மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும். கையால் தொட்டால் நகர கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது.இவை உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம்.
உடலில் கொழுப்பு அதிகம் தேங்கும் போது அது கட்டிகளாக மாறும். அதனால் இந்த கட்டிகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்குத்தான் வரும் என்பதில்லை. உடல் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கூட வரலாம்.
உடலில் கொழுப்புகள் கரையாமல் இருக்கும் போது தான் இந்த கட்டிகள் உருவாகிறது. இதை கரைக்க எளிமையான குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது.
தேவையான பொருட்கள்
கமலா ஆரஞ்சு தோல்
நல்லெண்ணெய்
கல் உப்பு
செய்முறை
இதற்கு முதலில் நீங்கள் கமலா ஆரஞ்சு பழத்தை எடுத்துக்கொண்டு அதன் தோலை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு இரும்பு கடாயை எடுத்து அதனை அடுப்பில் வைத்து அதில் 5 ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி நறுக்கி வைத்திருந்த ஆரஞ்சு பழ தோலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை நீங்கள் ஒரு பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும் இவற்றுடன் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
இதனை நீங்கள் துணியில் போட்டு மூட்டை கட்டி கொழுப்பு கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும. இவ்வாறு செய்யும்போது அந்த இடத்தில் ரத்த ஓட்டம் சீராகி கொழுப்பு கட்டி கரைந்து விடும்.