முடி ரொம்ப அடர்த்தியா வளரணுமா?? கண்டதையும் தேய்க்காம இத மட்டும் யூஸ் பண்ணுங்க!!

0
130

முடி ரொம்ப அடர்த்தியா வளரணுமா?? கண்டதையும் தேய்க்காம இத மட்டும் யூஸ் பண்ணுங்க!!

மூன்று முறை ஒரு வாரம் தடவுங்கள் முடி கொட்டுவது நின்று அடர்த்தியாக வளரும்.இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு.

இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது. அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி.

ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய வழுக்கை விழுதல், இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த பெண்களை பரவலாகக் காண முடிகிறது.

முடி உதிர்வைத் தடுக்க முடி மாற்று சிகிச்சை, ஸ்பாவுக்குச் செல்லுதல், ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது எனப் பலரும் பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

ஒரு பக்கம் இவற்றால் கிடைக்கும் பலனைவிட செலவுதான் அதிகம். முடி உதிர்வைத் தடுக்க, நன்கு முடி வளர எளிய செய்முறைகள் சில உள்ளன.

அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லதே கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகமாக கொட்ட வைக்கிறது. குறிப்பாக சரியான உணவு பழக்கம் வாழ்க்கை முறை போன்ற முக்கிய காரணமாக அமைகிறது.

முடியை பராமரிக்க மக்கள் நிறையவே கடைகளில் இருந்து வாங்கி தன் முடியை பாதுகாத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.எனவே இதனை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய மருத்துவம்.

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல்

தேங்காய் எண்ணெய்

செய்முறை:

1: கற்றாழை எடுத்து அதன் தோலை நீக்கி வைக்கவும்.

2: அதில் உள்ள ஜெல்லை எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

3: அந்த கற்றாழை ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு அதில் மூணு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த கிரீமை தலையில் தேய்த்து வந்தால் போதும்.பொடுகு இருந்தால் கூட இந்த கிரீமை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு நீங்கிவிடும்.

முடியின் வேர்களில் நன்றாக தேய்த்து விட்டு பின்பு ஹெர்பல் ஷாம்பு போட்டு முடியை கழுவினால் போதும்.

இதில் பயன்படுத்திருக்கும் கற்றாழை நம் முடியின் வேர்களில் நல்ல ஒரு வலுவை கொடுக்கும்.

இரண்டு நாளைக்கு ஒருமுறை தேய்த்து குளித்தால் முடியின் அடர்த்தியும் மற்றும் வளர்ச்சியும் நன்றாக தெரியும்.