உங்கள் ஸ்மார்ட் போன் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 7 சிம்பிள் டிப்ஸ்!!
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.
அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோன காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழலல் ஏற்பட்ட பொழுது இளைஞர்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. அதிலும் மன அழுத்தத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளது.
இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிருவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது.
இப்படி நாம் பெரிதும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதற்கும் அது நீண்ட காலம் உழைப்பதற்கும் 7 முக்கிய குறிப்புகளை பார்க்கலாம்.
- அந்த வகையில் நாம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பொழுது தப்பி தவறி கீழே போட்டு விழுந்தால் அதற்கு முதலில் பேக்கேஸ் பொருத்த வேண்டும்.
- மொபைல் போன் மென்மையான துணியை வைத்து போன் ஸ்கிரீனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
- உங்களது போனை நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க கூடாது.மிதமான வெப்பநிலையில் மட்டுமே வைக்க வேண்டும்.
- பேட்டரி நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்றால் நீங்கள் முழுவதுமாக சார்ஜர் போட கூடாது. அதில் குறிப்பாக 20 சதவீதத்தில் இருக்கும்பொழுது சார்ஜர் போட்டு அது 80 சதவீதம் வந்த உடன் எடுத்து விடவும்.
- மொபைல் போனில் அதிக அளவு ஸ்டோரேஜ் வைக்க வேண்டாம்.தேவை இல்லாத புகைப்படம் மற்றும் வீடியோக்களை அழித்து விடுவது நல்லது.
- போனின் மீது கனமான பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக தண்ணீர் படாமல் வைத்திருக்க வேண்டும்.
- உங்களது மொபைல் போனில் உள்ள அனைத்து செயலிகளையும் அடிக்கடி அப்டேட் செய்வது மிகவும் நல்லது.
- இந்த வழிமுறைகள் அனைத்தையும் கட்டாயம் கடைபிடித்தால் உங்களது ஸ்மார்ட் போன் நீண்ட நாள் உழைக்கும்.