டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டிற்கு நாடு பந்து வேறுபடுகிறதா?

0
138
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பந்து நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. இதுகுறித்து வக்கார் யூனிஸ் பேசும்போது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து போன்ற நாடுகள் டியூக்ஸ் வகை பந்தையும், இந்தியா எஸ்.ஜி. பந்தையும், ஆஸ்திரேலியா கூக்கப்புரா பந்தையும் பயன்படுத்துகின்றன. இதனால் ஒருநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று விளையாடும்போது, பந்து வீச்சாளர்கள் அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சிரமப்படுகிறார்கள்.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் முழுவதும் ஒரு பிராண்ட் பந்தை பயன்படுத்த வேண்டும் நான் உணர்கிறேன். அது எந்த பிராண்ட் என்பது முக்கியமல்ல. ஆனால், ஐசிசி இந்த முடிவை கட்டாயம் எடுக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் உலகின் பல்வேறு இடங்களில் விளையாடும்போது, மாறுபட்ட பந்துகளுக்கு ஏற்ப தங்களை  தயார்படுத்திக் கொள்வது கஷ்டம்’’ என்று கூறினார்.