இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

0
188

இனி கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உண்டா?? சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

தற்போது கணவரின் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம். கண்ணையா என்பவருக்கு கடந்த 1965 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இதற்கிடையில் இவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இப்போது இவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார் அது என்னவென்றால், கண்ணையா வெளிநாட்டில் சம்பாதித்து அந்த பணத்தை வைத்து மனைவியின் பெயரில் சில சொத்துக்களை வாங்கியுள்ளார்.

தற்போது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு இவரின் சொத்துக்களை அபகரிக்க நினைத்துள்ளார். எனவே கண்ணையா நீதிமன்றத்தில் என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் எனக்கு மட்டுமே சேர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கன்னையாவின் மனைவி கணவர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு நான் என்னுடைய குடும்ப சொத்துக்களை அனைத்தும் விற்று அனுப்பி வைத்தேன். எனவே கணவரின் சொத்தில் எனக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆண்கள் வெளியே சென்று எட்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றால் குடும்பத் தலைவிகள் வீட்டில் இருந்தபடியே 24 மணி நேரமும் வேலை செய்து வருகிறார்கள் எனவே கணவர் செய்கின்ற அந்த எட்டு மணி நேர வேலைக்கும் மனைவி செய்கின்ற இந்த 24 மணி நேர வேலைக்கும் எப்போதுமே ஈடாகாது.

மேலும் கணவர் ஒரு சொத்து வாங்குவதற்கு மனைவி நேரடியாகவோ மறைமுகமாகவோ அதில் பங்களித்திருந்தால் கூட அவருக்கு அந்த சொத்தில் பாதி உரிமை இருக்கிறது என்று இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது இந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் ஒருவேளை கணவரின் சொத்தில் மனைவிக்கு பாதி பங்கு இருக்கிறது என்று சட்டம் வந்தால் மட்டுமே இது பொருந்தும்.

எனவே இது போன்ற ஏராளமான வழக்குகள் தினமும் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும் இது குறித்து ஏதேனும் சட்டம் வந்தால் மட்டுமே இது போன்று கணவரின் சொத்தில் மனைவிக்கும் பங்கு உள்ளது என்பது பொருந்தும். மற்றபடி இது இந்த வழக்கிற்கு என அளிக்கப்பட்ட தீர்ப்பு மட்டுமே ஆகும். இதே போல பெண்களுக்கு தந்தையின் சொத்தில் பங்கு இருக்கிறது என்று சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.