இனி போலீஸ்- அ பார்த்து பயப்படாதீர்கள்!! இந்த சட்டத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!
காவல்துறை அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்பது சரியா ?தவறா? இதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். காவல்துறையினர் ஒரு நபரை கைது செய்கிறார்கள் என்றால் அந்த நபர் காவல் துறையினரை தாக்கினாலோ அல்லது தப்பிக்க முயன்றாலோ அப்பொழுது காவல்துறையினர் அந்த நபரை தாக்கலாம் அதுவும் குறைந்தபட்ச தாக்குதலாக தான் இருக்க வேண்டும் என்று சட்டமே உள்ளது.
எனவே இது போன்று இல்லாமல் காவல்துறை அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் ஒரு நபரை தாக்கினால் அதை நாம் PCA வில் புகார் அளிக்கலாம். எனவே PCA என்பது என்னவென்று தெரிந்து கொள்வோம். கடந்த 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் காவல்துறை அதிகாரிகள் மீது புகார் அளிக்கவும், அந்த புகாரை விசாரிக்கவும் ஒவ்வொரு மாநிலத்திலும் PCA (police complaint authority) என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியது.
இந்தியாவில் உள்ள 18 மாவட்டங்களில் இந்த அமைப்பு கொண்டு வரப்பட்டது. மேலும் டெல்லி உட்பட பத்து மாநிலங்களில் இந்த அமைப்பிற்கான செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் இந்த PCA வின் கீழ் புகார் அளிப்பவர்களுக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பும் கொடுத்து வருகிறார்கள். மேலும் இந்த PCA அமைப்பானது 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலும் நடைமுறையில் உள்ளது.
மேலே கூறப்பட்டுள்ள அந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு மாநில அளவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதிபதியையும், மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும் இருக்க வேண்டும் என்று இந்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்த PCA புகாரை விசாரிப்பதற்கு மாநில அளவில் டிஜிபி மற்றும் ஏடிஜிபியும், மாவட்ட அளவில் எஸ் பி யும் மாவட்ட ஆட்சியரும் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு ஒரு சட்டம் இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
எனவே இனி காவல்துறையினரை பார்த்து பயப்பட தேவையில்லை இந்த சட்டத்தை தெரிந்து கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.