Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!!

#image_title

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் தற்பொழுது அவருடைய சமூக வலைதளத்தில் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளின் டிக்கெட்டுகள் வேண்டும் என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை அணியுடன் நாளை(அக்டோபர்5) குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் மோதவுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பை தொடருக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொள்கின்றது. இந்த போட்டி அக்டோபர் மாதம் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று விராட் கோஹ்லி அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை என்னிடம் கேட்டு நண்பர்கள் யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் உலகக் கோப்பை தொடரை வீட்டில் இருந்தே கண்டு களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

விராட் கோஹ்லி அவர்களின் இந்த பதிவை பகிர்ந்து அவருடைய.மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா அவர்கள் நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வரவில்லை என்றால் தயவு செய்து என்னிடம் உதவி கேட்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version