உங்கள் போனை இவ்வாறு சுத்தம் செய்யாதீர்கள்!! இல்லையென்றால் ஆபத்தாகிவிடும்!!
இந்த காலத்தில் யாருமே ஸ்மார்ட் போன் இல்லமால் இருப்பதே இல்லை. வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக வாழ்ந்து வருகிறோம்.
காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை என அனைத்து நேரமுமே இந்த போனில் நமது நேரத்தை கழிக்கிறோம். அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக சிலவற்றை செய்து விட்டால், அது ஸ்மார்ட் போனிற்கு ஆபத்தாக முடிந்து விடும்.
நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கின்ற அழுக்குகளை நீக்குவதற்கு கூர்மையான ஊசியை பயன்படுத்தக் கூடாது. இது போன்று ஊசியை மொபைல் போனில் பயன்படுத்த போன் கடைகாரர்களுக்கு மட்டுமே தெரியும்.
சில பேர் ஸ்மார்ட் போனை சுத்தம் செய்ய ஹீட்டிங் புளோவரை பயன்படுத்துவார்கள். ஆனால் அவ்வாறு செய்ய கூடாது. ஹீட்டர் பயன்படுத்தி நாம் சுத்தம் செய்யும்போது ஏதேனும் பொருள்கள் சேதமடைந்து விட்டால் அது நமக்கு செலவை ஏற்படுத்திவிடும்.
மேலும், ஸ்மார்ட் போனை சுத்தம் செய்வதற்கு திரவ கிளீனர்களை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக ஆல்கஹால் கிளீனரை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
சில பேர் ஸ்மார்ட் போனின் ஸ்கிரீனை சுத்தம் செய்வதற்கு ஏதேனும் ஒரு துணியில் அழுத்தி துடைப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு. எனவே, ஸ்மார்ட் போனின் ஸ்கீரினை எப்பொழுதுமே மைக்ரோ பைபர் துணி கொண்டு மட்டுமே துடைக்க வேண்டும்.