Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

வாய்ப்புண் குணமாக எளிய வீட்டு வைத்தியம்.
குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம்.

அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.
தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம்.

எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும்.

இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.
ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம்.

காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.
எனவே இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்..

தேவையான பொருட்கள்:

தேங்காய்

ஏலக்காய்

தேன்

செய்முறை:

முதலில் மிக்ஸி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய் 2 ஏலக்காய் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு துணி வைத்து அதனை வடிகட்டி அதில் உள்ள தேங்காய் பாலை தனியாக எடுத்து வைக்கவும் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் வாய்ப்புண் வயிற்றுப்புண் அனைத்தும் சரியாகிவிடும்.

மேலும் வாய்ப்புண்ணை போக்குவதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் இளநீர் மோர் இதுபோன்ற குடித்து வந்தால் வாய்ப்புண் வருவதனை மேலும் தடுத்துவிடலாம்.

Exit mobile version