கட்டுமான தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!! தமிழக அரசின் சூப்பரான நியூஸ்!!

0
161

கட்டுமான தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!! தமிழக அரசின் சூப்பரான நியூஸ்!!

தமிழக அரசு தற்போது கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் திறன் பயிற்சி மற்றும் ஒரு வாரத்திற்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளதாக முடிவு செய்துள்ளது.

இந்த திறன் பயிற்சியானது முதன்முதலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தையூர் கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும். இதற்கு அடுத்தபடியாக நாவலூர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 20 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இந்த திறன் பயிற்சியில் வெல்டர், கொத்தனார், பிளம்பர் மற்றும் கம்பி வளைப்பது போன்ற தொழில்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி முதலிய அடிப்படை வசதிகள் அங்கேயே இலவசமாக வழங்கப்படும்.

இந்த திறன் பயிற்சியில் தொழிலாளர்களுக்கு எந்த விதமான குறையும் இல்லாமல் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த திறன் பயிற்சியில் கலந்து கொள்வதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை சரி செய்வதற்காக தினமும் ரூபாய் 800 வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் இந்த திறன் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரசால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.