Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா கேப்டன் விராட் கோலி? தலைமை பயிற்சியாளர் சூசக தகவல்!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. தொடரில் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது போட்டியில் முதுகு வலியின் காரணமாக, இந்த தொடரில் இருந்து விலகினார்.

அதன் பிறகு இந்திய அணி லோகேஷ் ராகுல் தலைமையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சந்தித்தது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, தொடர் சமநிலையை அடைந்தது.

இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேப்டன் விராட்கோலி தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதாவது விராட் கோலி காயத்தின் காரணமாக, 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தற்சமயம் காயத்திலிருந்து நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார். மைதானத்தில் சிறிது தூரம் ஓடினார் பந்தை எறிந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கேப்டவுனில் நடைபெற இருக்கின்ற வலை பயிற்சியிலும் அவர் ஈடுபடுவார் என்று தெரிவித்தார்.

ஆகவே மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கும் அவர் நல்ல உடல் தகுதியுடன் வந்துவிடுவார் என்று நம்புகிறேன் என ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version