கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அது மட்டும் இல்லாமல் கடந்த இரண்டு வருடமாக ஐ.பி.எல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்தது ஆனால் தற்போது இந்திய – சீன எல்லைப் பிரச்னையால் விவோ நிறுவனத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. அதனால் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகியது. தற்போது புதிய ஸ்பான்சராக ட்ரீம் 11 நிறுவனம் அதிகாரத்தை பெற்றுள்ளது. இதற்கு அந்த நிறுவனம் 200 கோடிக்கு மேல் அளித்துள்ளது.
டைட்டில் ஸ்பான்சருக்காக வாரி இறைத்த ட்ரீம் 11 நிறுவனம்
