Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தயிரை இப்படியெல்லாம் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! மக்களே அலார்ட்!!

#image_title

தயிரை இப்படியெல்லாம் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! மக்களே அலார்ட்!!

 

வெயில் காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டது.இனி எல்லார் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டியது இந்த தயிர் தான். இதில் எண்ணற்ற கலோரிகள் நிறைந்து உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

 

தயிரில் உள்ள நன்மைகள்:

 

பாலைக்காட்டிலும் தயிரானது மிகவும் சீக்கிரமாக செரிமானம் ஆகக்கூடிய ஒன்று.

அதனால் இதனை தினசரி உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் குறிப்பிட்ட சில அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி தயிரிலும் அதிக அளவு கால்சியம்,புரோட்டின் உள்ளது.

அதனால் கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இது அனைத்தும் வீடுகளிலும் தயாரிக்கும் தயிரில் இருந்து தான் முழுமையாக நமக்கு கிடைக்கும்.

ஆனால் கடைகளில் வாங்கும் தயிர் களில் மிகவும் குறைவான கால்சியம் மற்றும் புரோட்டினே இருக்கும்.

இதிலிருந்து பெரும்பாலான சத்துக்கள் நமது உடலுக்கு கிடைப்பதில்லை.

அதனால் முடிந்த அளவிற்கு வீட்டில் தயிர் துவையை வைத்து சாப்பிடுவது தான் நல்லது.

அதேபோல நாம் கடைகளில் வாங்கும் தயிர் பாக்கெட்டுகளில் புரோட்டின் அளவானது 15 சதவீதத்திற்கு கீழ் தான் இருக்கும்.

அதனை சரிபார்த்து வாங்குவதன் மூலம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பெரும்பாலான நபர்கள் உடல் எடை அதிகரித்து விடும் என்ற காரணத்தினாலேயே தயிரை எடுத்துக் கொள்வதை தவிர்த்துவிடுவர்.

ஆனால் தயிருடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் தான் உடல் எடை அதிகமாகும்.

குறிப்பாக ஊறுகாய், எண்ணெயில் பொரித்த பண்டங்கள் போன்றவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

 

தயிரை எப்படியெல்லாம் சாப்பிட கூடாது:

 

தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும் ஆனால் அவ்வாறு அறவே சாப்பிடக்கூடாது.

சர்க்கரையை சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் எடை அதிகரிக்க கூடும்.அது மட்டுமின்றி நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய் போன்றை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக கூடும்.

மேலும் பல் சொத்தை போன்ற பிரச்சனைகளும் உருவாகக் கூடும்.

எனவே தயிரை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

சிலர் மீன் வகைகளை சாப்பிட்டு விட்டு தயிர் சாப்பிடுவது உண்டு. இவ்வாறு சாப்பிடுவதால் உடலில் வெண்புள்ளிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

 

ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் இரவு நேரத்தில் தயிர் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

 

அதேபோல சிலர் சுடு சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடும் பழக்கம் வைத்திருப்பர். இவ்வாறு சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்படும்.

 

எப்பொழுதும் சாதம் ஆறிய பிறகு தான் தயிரை ஊற்றி சாப்பிட வேண்டும். அதுதான் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

Exit mobile version