பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

0
230
#image_title

பூச்சாண்டி காட்டாதீங்க, என்னிடம் நடக்காது; கொடநாடு வழக்கில் திமுகவுக்கும் தொடர்பு?- இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து காந்தி சிலை பகுதிக்கு வந்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 22 மாத திமுக ஆட்சியில் ஈரோட்டில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என குற்றச்சாட்டினார்,  

“கொடநாடு வழக்கை பற்றி சொல்லி முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகின்றார். அதை  தெளிவுபடுத்துகிறேன். கொடநாட்டில் திருட்டு, கொலை நடந்தது, அதை கண்டுபிடித்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜபடுத்தியது அதிமுக தான்” என்றார். குற்றவாளிக்கு ஜாமின் கொடுத்தது திமுக, திமுக எம்.பி தான் ஜாமீன் வாங்கி கொடுக்கின்றார் என தெரிவித்தார். கொடநாட்டை சொல்லி பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் என்னிடம் நடக்காது என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஐஜி தலைமையில் விசாரணை நடத்தி  90% நிறைவடைந்துவிட்டதாக சொன்னீர்களே, பின்னர் சிபிசிஐடிக்கு எதுக்கு மாற்றினீர்கள் என கேள்வி எழுப்பினார்.

குற்றவாளிகளுக்கும் திமுகவினருக்கும் சம்பந்தம் இருக்குமோ என பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர் எனவும், இதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகின்றீர்கள்? எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். மேலும் திமுக வக்கீல் ஏன் அவர்களுக்கு ஜாமீன்  வாங்கி கொடுக்கிறார்? அதனால் இவர்களுக்கும்  அவர்களுக்கும்  தொடர்பு என  மக்கள்  நினைக்கின்றனர், விரைவில் இது தொடர்பாக தகவல்கள் வெளியே வரும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்றும்  திமுக – காங்கிரஸ் தான் கொண்டு வந்தது என்றும், அதை எதிர்த்து அதிமுக எனவும் தெரிவித்தார். உதயநிதி சொன்னதால் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகமல் இருந்து விட்டனர். இதுவரை 12 உயிர் போய் விட்டது, மாணவர்களின்  உயிர் போனதுக்கு  திமுகவும் ,உதயநிதியும் தான்  பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.