Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் சங்ககிரியில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான ‘வள்ளி கும்மியாட்டம்’ நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் நடைபெற்ற கொங்கு மண்டல பாரம்பரிய கலையான கும்மியாட்ட நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டார்.இக்கலையின் சிறப்பம்சமே பல பெண்கள் சேர்ந்து ஆடி பாடுவதுதான்.இவ்வாட்டத்தை பார்ப்பதற்க்கு அவ்வளவு உத்வேகமாக இருக்கும்.

சொல்லப்போனால் வேடிக்கை பார்ப்பவர்களையும் நடனமாட ஈர்க்கும்.அத்துணை சிறப்பம்சங்களை கொண்ட இப்பரம்பரிய மிக்க கலையை சுப காரியங்களில் காணலாம் அதாவது திருமண நிகழ்வுகள்,கோவில் திருவிழாக்கள் முதலியவற்றில் காணலாம்.

வரலாறு மறந்த கதை தமிழகம் பாரம்பரியம் மிக்க கோவில் நகரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அத்துனை சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் இருந்து பாரம்பரியமிக்க கலைகள்,நாடகங்கள்,நாட்டியங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைகள் உயிர்ப்பித்துள்ளது.

நம் பாரம்பரிய கலைகளை கண்டு உலகமே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க தமிழ் மண்ணை சேர்ந்த நாம் நம் பாரம்பரிய மிக்க கலைகளை மறந்து வருகிறோம் என்பது வேதனைக்குரிய ஒன்று. இதுபோன்று காலப்போக்கில் நாம் மறந்து வரும் கலைகளால் நம் மண்ணின் வரலாறு மறைந்துவிடும் சூழல் உருவாக நாமே காரணமாகிவிடுவோம்.

இவ்வாறு நாம் காலப்போக்கில் மறந்து தற்பொழுது மீண்டும் கற்று வரும் கலைகளில் ஒன்று கும்மியாட்டம் .

தமிழகத்தின் சேலம்,கோவை,கரூர்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . மேலும் பெண்கள் மட்டுமல்லாமல் சிறுவர், சிறுமியர், மற்றும் ஆண்களும் கும்மி கலையை கற்றுவருவது மகிழ்ச்சியளிக்கும் தருணமாக உள்ளது .மேலும் இக்கலையை சிறப்பிக்கும் வகையில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் முதலமைச்சரும்,தற்பொழுது எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள திரு .எடப்பாடி பழனிசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியயை தொடங்கிவைத்தார்.

மேலும் வள்ளி கும்மியாட்ட நடனக்கலையை கண்டு ரசித்து மகிழ்ந்தார் எடப்பாடி பழனிசாமி அப்பொழுது ஏராளமான ஆதரவாளர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version