நாமக்கலில் முட்டை விலை சரிவு!! இரண்டு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றம்!!

0
122
Egg prices fall in Namakkal!! The price in two days is different!!

நாமக்கலில் முட்டை விலை சரிவு!! இரண்டு நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றம்!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களில் சரித்துள்ளது.அதன்படி ரூ.5.50  என்ற மதிப்பில் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.5.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றது அதில் 5 கோடி முட்டைகள் நாள் ஒன்றிற்கு பெறப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் முட்டைகள் அனைத்தும் தமிழக சத்துணவு திட்டம் ,வெளிநாடுகளுக்கு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது  என்று அனுப்பி வைக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இப்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 21 ம் தேதி ஒரு முட்டை ரூ.5.50  காசுகளாக இருந்த நிலையில் 10 காசுகள் குறைக்கப்பட்டது.

அதன்படி ஜூன் 30 ம் தேதி ரூ.5.40 காசுகள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்த முட்டை விலை குறைக்கபடலாம் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஜூலை 1 ம் தேதி 10 காசுகள் குறைக்க பட்டு 5.30 காசுகள் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த இரண்டு நாட்களில் மட்டும் முட்டை விலை  20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு விலை  குறைக்கப்பட இந்த  முட்டைகள் சென்னை ,பரவாலா,பெங்களூர் ,டெல்லி ,ஹைதராபாத்,மும்பை ,மைசூர்,விஜயவாடா மற்றும் கொல்கத்தா போன்ற பகுதிகளில் இதே மதிப்பிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் உயிருடன் இருக்கும் கோழி ரூ.120 என்ற மதிப்பிற்கும் மற்றும் முட்டை கோழி ரூ.97 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.