பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

0
96
Engineering Consultation Schedule Released!! Tamil Nadu Government Notification!!

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த பொதுத் தேர்விற்கான முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மே மாதம் ஐந்தாம் தேதி துவங்கி ஜூன் மாதம் நான்காம் தேதி முடிவடைந்தது.

இதில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பிற்கான இடங்கள் உள்ளது.

கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. மேலும், தமிழக அரசானது மாணவர்கள் கலந்தாய்விற்கு முன்பாக சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று வழிக்காட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

அதன்படி, மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முன்பாக கல்லூரிகளின் சதவிகிதம் என்ன என்று பல தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், கல்லூரிகளில் சென்ற ஆண்டு எவ்வளவு சேர்க்கை வந்திருக்கிறது என்று பலவற்றையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று கூறியது.இதனையடுத்து பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இன்று காலை 11 மணியளவில் வெளிவர இருக்கிறது.

இந்த அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட இருக்கிறார். இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு ஒரு லட்சத்து 80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.