Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்தை காப்பாற்றிய பின்வரிசை வீரர்கள்!

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரேனாடாவில் ஆரம்பமானது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனடிப்படையில், இங்கிலாந்து முதலில் களமிறங்கியது வெஸ்ட்இண்டீஸ் மிகவும் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது. இதனால் இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் மிக விரைவில் ஆட்டமிழந்தார்கள்.

இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 31 ரன்களுக்கு வெளியேறினார் முன்னணி வீரர்களான கிராலே 7 ரன்னிலும் ஜோ ரூட் டக் அவுட்டாகி அதிர்ச்சி வழங்கினார்கள்.

லாரன்ஸ் 8 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களிலும், வெளியேறினர். பின்னர் வந்த பேர்ஸ்டோவ் டக் அவுட் ஆனார். இதன் காரணமாக, இங்கிலாந்து அணி 100 ரன்களில் ஆட்டமிழந்துவிடும் என்று நினைத்தனர் வெஸ்ட் இண்டீஸ் அணியை சார்ந்தவர்கள்.

ஆனாலும் பின்வரிசை வீரர்களான கிறிஸ்வோக்ஸ், 25 ரன்களும், ஓவர்டான் 16 ரன்னும், எடுத்தார்கள். 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜாக் லீச், ஷஹிப் முகமது, ஜோடி மிகவும் பொறுப்புடன் விளையாடியது.

இந்த ஜோடி 26 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியதாக சொல்லப்படுகிறது. விளையாடி 90 ரன்கள் சேர்த்தனர். அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷகிப் 49 ரன்னில் வெளியேறினார்.

கடைசியாக இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆட்டமிழந்தது ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமலிருந்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பாக ஜெய் டன் சேல்ஸ் 3 விக்கெட், கைல் மேயர்ஸ் அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் உள்ளிட்டவற்றை வீழ்த்தினார்கள்.

Exit mobile version