Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்து – பாகிஸ்தான் 3வது நாளிலும் மழை

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 126 ரன்களுடன் பரிதவித்தது. பாபர் அசாம் 25 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் ஏறக்குறைய 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.  223 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் வீரர்கள் யாரும் களத்திற்கு கூட வரவில்லை மூன்றாவது நாள் ஆரம்பத்தில் இருந்தே மழை பெய்ய தொடங்கியதால் ஆட்டம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது.
Exit mobile version