Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருப்பு பட்டையை அந்த இங்கிலாந்து வீரர்கள்! காரணம் என்ன தெரியுமா!

இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் நான்கு டெஸ்ட் ஆட்டங்களை கொண்ட ஒரு தொடரில் விளையாட இருக்கிறது. இதன்படி இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது இந்திய அணி முதலில் தன்னுடைய பந்துவீச்சை ஆரம்பித்து இருக்கிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வீரர்கள் தன்னுடைய டீசர்ட்டில் கருப்பு பட்டை அணிந்து இன்றைய போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். உலக போரில் பங்குபெற்ற கேப்டன் சர்டாம் முரே அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களுடைய டீசர்ட்டில் கருப்புப் பட்டை அணிந்து கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சுமார் 100 வயதை அடைந்த சர்டாம் முரே சில தினங்களுக்கு முன்னால் வைரஸ் பாதிப்பால் இங்கிலாந்து நாட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Exit mobile version