தென்னாப்ரிக்கா உடனான 2 வது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. டர்பனில் நடைபெற்ற 2 ஆவது 20 ஓவர் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது இங்கிலாந்து அணியில் ராய் மற்றும் பட்லர் தொடக்க வீரராக களமிறங்கினர் பட்லர் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதிரடியாக ஆடிய ராய் 40 ரன்களிலும் பேர்ஸ்டோ 35 ரன்னிலும் வெளியேறினர். மோர்கன் 27 ரன்னிலும் மொயீன் அலி 11 பந்துகளில் 39 ரன் விளாசினார்.
சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் தென்னாபிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணியில் அந்த அணியின் கேப்டன் டிகாக் 8 சிக்சர் 2 பவுண்டரியுடன் 22 பந்தில் 65 ரன் குவித்தார். பவுமா, மில்லர் ஆகியோர் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வாண்டர் டெசன் ஆட்டமிழக்காமல் 43 ரன்களுடன் இருந்தார். 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், ஜோர்டன், டாம்கரண் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.