கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது டி 20 டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பட்லர் 2 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அதன் பின் வந்த பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் ஆகிய இருவரும் அதிரடியில் புகுந்தனர். பேர்ஸ்டோ 35 ரன்களிலும் ராய் 40 ரன்களிலும் அவுட் ஆகினர். கேப்டன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடிய ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் கடைசியாக இறங்கிய மொயின் அலி 11 பந்துகளில் 39 ரன்களை சேர்த்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஒவர் முடிவில் இங்கிலாந்து அணி 204 ரன்களை சேர்த்து 7 விக்கெட்களை இழந்திருந்தது.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் 22 பந்துகளில் 65 ரன்களை சேர்த்தார். அவரது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் அடங்கும். அதன் பின் வந்த வீரர்கள் சீராக விளையாட வெற்றி தென் ஆப்பிரிக்கா கைவசம் இருந்தது.
ஆனால் இடையில் எதிர்பாராத விதமாக சில விக்கெட்கள் விழுந்ததால் கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழல் உருவானது. கடைசி ஓவரை டாம் கரன் வீச 4 பந்துகளில் அதிரடியாக 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற சூழ்நிலை உருவானது. அதனால் தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வெற்றி பெறும் என நினைத்த வேளையில் கடைசி இரண்டு பந்துகளிலும் விக்கெட்கள் விழுந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.