Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து என்பது அதிக அளவிலேயே நடக்கின்றது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால் பல பேரின் உயிர்கள் இழப்பதோடு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது.

போக்குவரத்து விதிமுறை என்பது நம்மை பாதுகாப்பதற்கு ஆன ஒரு திட்டமாகும். ஆனால் பொது மக்கள் ஆகிய நாம் அதனை புரிந்து கொள்ளாமல் அதனை மீறி செல்கின்றோம் இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.

இதனால் போக்குவரத்து அதிகாரிகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். எனவே சாலைகளில் நின்று அதிகாரிகள் பொதுமக்களை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமுறை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தோம் மக்கள் சிலர் அதனை பெரிதாக மதிக்காமல் விதிமுறைகளை மீறி வருவதால் இந்த விபத்துக்கள் அனைத்தும் ஏற்படுகின்றது.

நீங்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட ஒருவரின் வாழ்க்கை இழப்பதற்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்பதை விதிமுறை ஆனால் சில அதனை சரியாக பின்பற்றுவதில்லை.

இதுபோன்று நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் பல உயிர்களை வாங்குகின்றது. இதிலும் சிலர் ஹெல்மெட் போட்டுவிட்டு அதன் பட்களை போடுவதில்லை. இவ்வாறு ஹெல்மெட் போட்டும் அதன் பட்களை போடவில்லை என்றால் நீங்கள் ஹெல்மெட் போட்டிருந்தாலும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

எனவே முறையாக ஹெல்மெட் போட வேண்டும் இதை காவல்துறைக்கு பயந்து போடவில்லை என்றாலும் உங்களது உயிரை காக்க வேண்டும் என்பதற்காக முறையாக போடுங்கள்.

மேலும் இந்த வகையில் ISI முத்திரை இருக்கும் ஹெல்மெட்டை அணிய வேண்டும் இல்லையென்றால் லோகுவாலிட்டி ஹெல்மெட் அணிகிறீர்கள் என்று அதற்கும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

Exit mobile version