Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இப்போதும் நிதீஷ் தேர்வு தவறுதான்..உண்மையான காரணம் இதுதான்!! மஞ்சரேக்கர் கூறுவது என்ன??

Even now Nitish's choice is wrong

Even now Nitish's choice is wrong

cricket: இந்தியா மற்றும் இடையிலான 4 வது போட்டியில் நிதீஷ் ரெட்டியை தேர்வு செய்தது இப்போதும் தவறுதான் கருத்து கூறும் மஞ்சரேக்கர்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய இடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த தொடரில் 4 போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.

ஆனால் நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. 4 வது போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடிய போது முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் முக்கிய வீரராக களத்தில் தனி ஆளாக நிதீஷ் குமார் ரெட்டி விளையாடி சதம் விளாசினார்.

இந்த போட்டிக்கு முன் இவர் அணியில் இருந்து 4 வது போட்டியில் நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் கில் நீக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய மஞ்சரேக்கர் அவர் போட்டிக்கு முன் அவரை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போட்டி முடிந்த பின்னும் அவரின் ஆட்டத்தை பார்த்த பின்னும் அதே கருத்தை கூறியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் ஒரு போதும் கில் பேட்டிங்கை ஈடு செய்ய முடியாது அவர் இருந்திருந்தால் ஒரு வேலை டிரா செய்திருக்கும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version