Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு 

#image_title

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு

சூரியனைப் பார்த்தால் தாமரை மலரும் ஆனால் தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திறக்கப் போவது பேனா மூடி அல்ல. மூடிய திட்டங்களை எல்லாம் திறந்து வைக்கக்கூடிய பேனா என திருவண்ணாமலையில்  நடந்த விழாவில் திரைப்படப் பாடலாசிரியர் பா. விஜய் பேசியுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணா சிலையின் முன்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70 பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் திரையுலக பாடலாசிரியர் பா. விஜய் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய திரை உலக பாடலாசிரியர் பா. விஜய் அவர்கள் வடமொழியை எதிர்த்து திமிர் கொண்டு அழித்தவர் அண்ணா அவர்கள் என்றும், வடமொழியிக்கு எதிராக அரசியல் நடத்தியவர் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி என்றும்,கலைஞரின் பேனா வெறும் காகித எழுத்து அல்ல அது ஆயுத எழுத்து என்று, சூரியனை பார்த்தால் தான் தாமரை மலரும் என்பது இயல்பு, ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சூரியனை பார்த்தால் தாமரை கருகும் என்பது இயல்பு, தெப்பக்குளத்தில் தாமரை கொடி படர்ந்தால் மாசுபடும், தமிழ்நாட்டின் மீது தாமரை கொடி பறந்தால் தமிழகமே மாசுபடும் என்று பா. விஜய் உரையாற்றினார்.

இன்றளவில் இந்திய சிம்மாசனத்தில் இருக்கும் தாமரையை தமிழகத்தில் இல்லாமல் ஓட ஓட விரட்டும் கூட்டமாக திமுக உள்ளது என்றும்.வலைய பார்த்தாலே எலிகள் பயப்படும். சீறும் அலைகளைப் பார்த்தால் குழந்தைகள் பயப்படும், நெருப்பினை பார்த்தால் எறும்புகள் பயப்படும். ஆனால் ஒரு சிலையை பார்த்து ஒரு சிலர் பயப்படுகிறார்கள் ஏனென்றால் அது பேனாசிலை.

இந்தப் பேனா தான் சனாதாங்களை உடைத்த சரித்திர பேனா. பேனாவை பார்த்து ஒருவன் பயப்படுவது என்றால் அது ஆயுதமாக பார்க்கப்படுகிறது என்றும். கலைஞரின் பேனா தந்தது வெறும் காகித எழுத்து அல்ல ஆயுத எழுத்து என்று எதிர்கட்சிகள் நம்புகின்றது என்று பாடலாசிரியர் விஜய் உரையாற்றினார்.

முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதியின் அவர்களின் பேனா என்பது விவசாயின் மகன்களை படிக்க வைத்ததும். கல்வி அறிவை இலவசமாக கிடைக்க வைத்ததும், ஏற்றத்தாழ்வுகளை அழித்ததும், தீண்டாமைக் கொள்கையை அழித்ததும், விவசாயின் மகன் சேற்றில் உழைக்க வேண்டும் என்பது இல்லை. அவன் தகவல் தொழில் நுட்ப பிரிவில் படிக்க வேண்டும் என்று சொன்னது அந்த பேனா தான் என்றும், கல்வி அறிவை இலவசமாக கொடுத்ததும் இந்த பேனா தான் என்றும் பாடலாசிரியர் விஜய் உரையாற்றினார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திறக்கப் போவது மூடிய பேனா அல்ல, மூடிய திட்டங்களை எல்லாம் திறந்து வைக்கக்கூடிய பேனா என்று பாடலாசிரியர் விஜய் உரையாற்றினார்.

Exit mobile version