ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ராஜஸ்தானிடம் போராடி விழுந்த டெல்லி அணி!

0
120

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற பரபரப்பு தற்போது தொற்றிக்கொண்டது.

தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்சமயம் அந்த தோல்விகளிலிருந்து மெல்ல, மெல்ல, மீண்டு இருந்துவருகிறது. சென்னை அணி விளையாடிய கடைசி ஆட்டத்தில் தோனி ஆடிய ருத்ர தாண்டவத்தால் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற 34வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் ஆரஞ்சு நிற தொப்பியை ஏற்கனவே கைவசம் வைத்திருக்கும் பலர் இந்த போட்டியிலும் ஆரம்பத்திலேயே அதிரடியை காட்டத் தொடங்கினார்.

டெல்லி அணியின் பந்துவீச்சு இருவரும் துவம்சம் செய்தார்கள். சிறப்பாக விளையாடிய அவர் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார் அவரை தொடர்ந்து படிக்கல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

இவர்களின் அதிரடியின் காரணமாக, ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை தாண்டியது. இந்த ஐபிஎல் தொடரில் தொடக்க வீரர்கள் அடிக்கும் முதலாவது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்  அதிரடியாக விளையாடிய படிக்கல் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அணியின் கேப்டன் சாம்சன் களமிறங்கினார்.

இதனைத்தொடர்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பட்லர் சதமடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது அவருடைய 3வது ஐபிஎல் சதமாகும் அதோடு மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக அவர் அடிக்கும் 2வது சதமாகும்.

இருவரின் அதிரடி காரணமாக. ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. 65 பந்துகளில் ௧௦௦ ரன்களை குவித்த பட்லர் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதிக்கட்டத்தில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்விஷா, டேவிட் வார்னர், களம் புகுந்த வேகத்தில் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த சர்பிரஸ் ஒரு ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ப்ரித்விஷாவுடன் இணைந்து டெல்லி அணியின் கேப்டன் ஈடுபட்டார்.

50 ரன்கள் பார்ட்னெர்ஷிப்பை இந்த ஜோடி கடந்தது. ஆனாலும் ப்ரித்விஷா அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் 44 ரன்களில் வெளியேறினார், கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டபோது களத்திலிருந்த லலித் யாதவுடன் பவல் ஜோடி சேர்ந்தார. 18-வது ஓவரில் இருவரும் இணைந்து 15 ரன்களை குவித்தார்கள்.

19-வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா 37 ரன்னில் அவரை வெளியேற்றினார். அதோடு அந்த ஓவரில் அவர் ஒரு ரன்களை கூட விட்டுக் கொடுக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை ஓபெய்மெக்கொய் வீசினார். களத்திலிருந்த பவல் முதல் 3 பந்துகளில் சிக்ஸர்களை விளாச ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

4வது பந்தில் ரன் எதுவும் கிடைக்கவில்லை 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்த அவர் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார். ஆகவே டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது. இதன்மூலமாக ராஜஸ்தான் அணி இந்த தொடரில் 5வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.