Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்! ரசிகர்களுக்கு அனுமதி அளித்த பிசிசிஐ!

வரும் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் இருக்கின்ற எம்.ஏ .சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 3வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக அகமதாபாத் நகரில் இருக்கின்ற வதேரா மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் இதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது 5ஆம் தேதி இரண்டாவது ஆட்டமும் அதோடு 13ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் அதிகமாக பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கும் காரணத்தால், ரசிகர்களை போட்டியின்போது அனுமதிக்கலாமா, வேண்டாமா, என்ற விவாதம் நடந்து வருவதாக தெரிகிறது

அதேபோல வரும் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை காண்பதற்காக, தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு தொடர்ந்து 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மோதேரா மைதானத்தில் நடைபெறவிருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version