ஒரு வருடத்திற்கு பிறகு அணியில் ஃபாஸ்ட் பவுலர்… உலகக் கோப்பையை நோக்கி செயல்பட வேண்டும் என்று பதிவு…
ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவர்கள் இடம்பிடித்துள்ளார். மேலும் அவர் 2023ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் விளையாடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட் தொடர்பான நியூசிலாந்து நாட்டின் மத்திய ஒப்பந்தத்தை டிரெண்ட் போல்ட் நிராகரித்துவிட்டார். இருந்தும் நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதின் நோக்கமாக தற்பொழுது நியூசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அணியை நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியுசிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும் முதுகு வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த கைல் ஜேமிசன் அவர்களும் அணிக்கு திரும்பியுள்ளார்.
நியூசிலாந்து அணியில் இடம்பெற்றது குறித்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவர்கள் “நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை நோக்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதும் உண்டு. அடுத்த இரண்டு மாதங்கள் முழுவதும் சக வீரர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படுவேன் என்று நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணியை எதிர் கொள்கின்றது. இந்த போட்டி அக்டோபர் மாதம் 5ம் தேதி நடைபெறுகின்றது.