Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

FIFA: சவூதி அரேபியா வெற்றி! அர்ஜென்டினா அணி கேப்டன் வருத்தம்! 

FIFA: Saudi Arabia win! Argentinian team captain upset!

FIFA: Saudi Arabia win! Argentinian team captain upset!

FIFA: சவூதி அரேபியா வெற்றி! அர்ஜென்டினா அணி கேப்டன் வருத்தம்!

உலகின் சர்வதேச விளையாட்டு திருவிழாக்களில் இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இவை கடந்த 1930 ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.இந்த போட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.அதன் பிறகு தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றது.

இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதி கொண்டது.ஆட்டம் தொடங்கியதுமே அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினார்கள்.

மேலும் ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார்.அதனை தொடர்ந்து நடைபெற்ற 2 வது பாதி ஆட்டத்தில் சவூதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48 வது நிமிடத்திலும் ,சலேம் அல்தாவசாரி 53 வது வரிசையில் உள்ள சவூதி அரேபியா வீழ்த்தியது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சவூதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய தோல்வியாகும் .இந்த தோல்வி எனக்கு மிக வலியாக உள்ளது. சவூதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றாக உள்ளது. இந்த தோல்வியில் இருந்து மீண்டும் வருவோம்.மெக்சிகோவை வீழ்த்த முயற்சி செய்வோம் என மெஸ்ஸி கூறியுள்ளார்.

Exit mobile version