Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

FIFA:உலக கோப்பை கால்பந்து போட்டி! கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை!

FIFA: World Cup football tournament! The head of the Catholic Church prays!

FIFA: World Cup football tournament! The head of the Catholic Church prays!

FIFA:உலக கோப்பை கால்பந்து போட்டி! கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை!

உலக சர்வதேச விளையாட்டு திருவிழாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியும் ஒன்றாக உள்ளது.இந்த போட்டியானது முதலில் கடந்த 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது.தற்போது இந்த ஆண்டு இந்த போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நடைபெற்று வரும் உலக கோப்பையை உற்சாகப்படுத்தினார்.

இந்த கத்தார் போட்டி உலகில் நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருக்க பிராத்தனை செய்வதாகவும் கூறினார்.மேலும் பொது பார்வையாளர்களின் முன்னிலையில் தனது வாராந்திர சந்திப்பில் பேசிய பிரான்சிஸ் அப்போது அவர் கூறுகையில் கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து வீரர்கள் ,ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

மக்களிடையே சகோதரத்துவத்தையும் ,அமைதியையும் அதிகரிக்கும்.அப்போது உலகில் அமைதி நிலவும்அனைத்து விதமான பிரச்சனைகளும் ஒரு முடிவாக அமையும் என பிராத்தனை செய்வோம் என கூறினார்.

Exit mobile version