Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல் நாளான பாராலிம்பிக் போட்டிகள்! இந்தியா வெற்றி பெற்றதா?

First day results of tokyo paralympics

First day results of tokyo paralympics

முதல் நாளான பாராலிம்பிக் போட்டிகள்! இந்தியா வெற்றி பெற்றதா?

டோக்கியோ பாராலிம்பிக்ஸின் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றிருந்தது.இந்நிலையில் இன்றிலிருந்து இந்தியாவிற்கான போட்டிகள் தொடங்கியிருக்கிறது.டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனைகள் இருவர் களமிறங்கியிருந்தனர்.இருவருமே தோல்வியை தழுவியிருக்கின்றனர்.சி3 பிரிவில் பங்கேற்றிருக்கும் சோனல் படேல் சீன வீராங்கனையான லீ குவானுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடியிருந்தார்.

மொத்தம் 5 கேம்கள்.இதில் 2-3 என சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவியிருந்தார் சோனல்.தோற்றிருந்தாலும் இவர் ஆடிய விதமும் அவரின் போர்க்குணமும் பெரிதாக அனைவரையும் கவர்ந்திருந்தது.டேபிள் டென்னிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நாடு சீனா.அந்த நாட்டின் வீராங்கனைக்கு எதிராக அவருக்கே தோல்வி பயத்தை கொடுக்குமளவுக்கு ஆடியிருந்தார் சோனல்.

முதல் கேமை 11-9 என்ற வகையில் வென்று தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். இரண்டாவது செட்டை லீ குவான் வென்றிருந்தார்.போட்டி 1-1 என சமநிலையிலிருந்தது. இதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது கேம்தான் பரபரப்பின் உச்சத்தை தொட்டது என சொல்லலாம்.மூன்றாவது கேமின் தொடக்கத்தில் 1-5 என சொனால் பின்னடைவையே சந்தித்திருந்தார்.ஆனால் அவர் அங்கிருந்து மீண்டு வந்து தொடர்ச்சியாக 5 புள்ளிகளைப் பெற்று 6-5 என லீட் எடுத்தார்.இதன்பிறகு இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுக்க ஆட்டம் நீண்டு கொண்டே சென்றது.இறுதியில் 17-15 என்ற கணக்கில் சோனல் வெற்றி பெற்றார்.இருப்பினும் அடுத்த செட்டுகளை இழந்து சோனல் தோல்வியுற்றார்.இதன் மூலம் 2-3 என்ற கணக்கில் லீ குவான் வெற்றி பெற்றார்.

பாராலிம்பிக் போட்டிகள் முதல் நாள் ஆட்டமானது தோல்வியிலேயே முடிந்துள்ளது.இருப்பினும் பதக்க நம்பிக்கை உள்ள ஆட்டங்கள் இனிமேல் தான் நடைபெறுகிறது.அதனால் இந்திய ரசிகர்கள் அந்த ஆட்டங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் ஆர்வமாக போட்டியாளர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version