Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கத்தாரில் நடைபெறும் கால்பந்து போட்டி!  ஹையா கார்டு விண்ணப்பிக்கும் முறை!கத்தாரில் நடைபெறும் கால்பந்து போட்டி!  ஹையா கார்டு விண்ணப்பிக்கும் முறை!

Football match in Qatar! Hia Card Application Procedure!

Football match in Qatar! Hia Card Application Procedure!

கத்தாரில் நடைபெறும் கால்பந்து போட்டி!ஹையா கார்டு  விண்ணப்பிக்கும் முறை!

நீங்கள் கால்பந்து விளையாட்டின்  ரசிகராக உள்ளவர்கள் என்றால் அதனை அடையாளப்படுத்திக் கொள்ளும் அட்டை தான் பேன் ஐடி கார்டு.இதனை கத்தார் நாட்டிற்குள் நுழையவும் ,போட்டி நடைபெறும் மைதானங்களில் செல்வதற்கும் போட்டி நடக்கும் நாட்களில் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கவும் இந்த பேன் ஐடி கார்டு தேவைப்படுகிறது.மேலும் கத்தார் நாட்டிற்கு சென்று பிபா கால்பந்து போட்டிகளை பார்பதற்கும் அனைவருக்கும் இந்த கார்டு என்பது கட்டாயமாகும்.குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என அனைவருக்கும் ஹையா கார்டு தேவை.மேலும் சிறியவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

பிபா உலகக்கோப்பை கத்தார் 2022 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹையா கார்டு பெற விண்ணப்பம் செய்யலாம்.இல்லையெனில் ” ஹையா டூ கத்தார் 2022  என்ற மொபைல் ஆப் மூலமும் விண்ணப்பிக்கலாம்

தேவைப்படும் ஆவணங்கள்:

முதலில் ஆன்லைனில் சுய விவரங்களை பதிவு செய்து ஹையா அக்கவுண்ட் உருவாக்க வேண்டும்.அதில் லாகின் செய்ய வேண்டும்.அதன் பிறகு போட்டிக்கான டிக்கெட் அப்ளிகேஷன் நம்பர் கொடுக்க வேண்டும்.அதனையடுத்து தனிப்பட்ட விவரங்கள் ,பாஸ்போர்ட் தகவல்கள் ,வீட்டு முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் .அதனையடுத்து நீங்கள் சர்வதேச பார்வையாளர்களாக இருந்தால் எந்த இடத்தில் தங்கியுள்ளனர் என்ற விவரம் வேண்டும்.உங்களை தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு தொலைபேசி எண் அளிக்க வேண்டும்.பாஸ்போர் சைஸ் போட்டோ ஒன்று டிஜிட்டல் வடிவில் வைத்திருப்பது மிக அவசியம்.

Exit mobile version