பிரேசிலின் கால்பந்து வீரரான வில்லியன் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் செல்சி அணிக்காக கடந்த 2013ல் இருந்து விளையாடி வந்தார். 32 வயதாகும் இந்த வீரர் 339 போட்டிகளில் விளையாடி உள்ளார் மேலும் 63 கோல்கள் அடித்துள்ளார். இவருடைய அணி இரண்டு முறை பிரிமீயர் லீக்கை வென்றுள்ளது. இந்த நிலையில் செல்சி அணியுடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவடைந்து விட்டது.
மேலும் இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்ய செல்சி அணி தயாராக இருந்தது. ஆனால் வில்லியன் நீண்ட வருடத்திற்கு ஒப்பந்தம் செய்ய விரும்பினார். இதனால் பேச்சுவார்த்தை நீண்டு கோண்டே செல்ல ஃப்ரீ டிரான்ஸ்பர் மூலம் அர்சனல் அணிக்கு செல்ல விரும்பினார் தற்போது அர்சனல் அணியுடன் 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.