Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்!

#image_title

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்!

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் புகழாரம்! டோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது – கவாஸ்கர் சொல்கிறார்.

இந்தியா கிரிக்கெட் அணியில் எத்தனையோ கேப்டன்கள் இருந்திருந்தாலும், அவர்களில் ஒரு சிலரே மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்கள். அந்த வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளவர் தான் மஹேந்திர சிங் தோனி, ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கும் அளவுக்கு தன்னுடைய செயல்பாடுகளால் அணைவரையும் கவர்ந்தவர்.
தோனியை அணைவருக்கும் பிடித்திருக்க காரணம் அவருடைய போராடும் குணம் தான். எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அதில் தோற்பதோ அல்லது ஜெயிப்பதோ அது அடுத்த விஷயம் ஆனால் நம் இலக்கை அடையும் வரை போராட வேண்டும் என்பதும் அதே சமயத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப யோசனைகளையும் முடிவுகளையும் மாற்றி கொண்டு போராட வேண்டும் என்பது தான் அவருடைய அறிவுரையாகவே இருக்கும்.
இந்நிலையில் தோனியின் கேப்டன் ஷீப் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது தோனிக்கு நன்கு தெரியும். தோனி கேப்டன்ஷிப்பில் மட்டுமே இது சாத்தியமாகும். 200 ஐபிஎல் ஆட்டங்களுக்கு தலைமை தாங்கி இருப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். இவ்வளவு போட்டிகளில் கேப்டனாக இருப்பது ஒரு சுமையாகும்.
தோனி அதிகப்படியான போட்டிகளில் விளையாடி இருப்பது அவரது ஆட்ட திறனையும் பாதிக்கும். டோனி சற்று வித்தியாசமான கேப்டன். அவரை போன்று கேப்டன் யாரும் இருந்தது கிடையாது. வருங்காலத்திலும் அவரை போன்ற ஒரு கேப்டனை பார்க்கவும் முடியாது’ என்றார்.
Exit mobile version