Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த முன்னாள் கேப்டன்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குறிகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் இந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வீர்கள் அனைவரும் ஐக்கிய அமீரகத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிராண்ட் தூதராகவும் வழிகாட்டியாகவும் ஷேன் வார்னை நியமித்தது. இவர் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகாக விளையாடி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version