லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!
சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் லாட்டரி சீட் விற்பனை முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தற்போது அரசு அதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த லாட்டரி சீட்கள் ஆங்காங்கே சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த லாட்டரி சீட் விற்பனை நடக்கிறதா என்பதை கண்டுபிடிக்க காவல் துறையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கருங்கல்பாளையம் காவல் துறையினரும் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, கருங்கல்பாளையத்தில் உள்ள கே.எஸ்.நகர், ஸ்ரீரங்கபவனம் திருமண மண்டபத்தின் பக்கத்தில் இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.
எனவே சம்பவ இடத்திற்கு வேகமாக வந்த காவல் துறையினர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பலை பிடித்தனர். நான்கு பேர் கொண்ட இந்த கும்பலிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், இவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், முல்லைவாடி இளங்கோ தெருவில் வசிக்கும் ரவி இவருக்கு வயது 50. ஈரோடு விநாயகர் கோவில் தெருவில் உள்ள மூலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆனந்த், இவருக்கு வயது 50.
இவர்களுடன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மங்கலம் பகுதியில் வசிக்கும் நிர்மலா , இவருக்கு வயது 36 மற்றொருவர் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் தரநீஸ், இவருக்கு வயது 21 என்பது தெரிய வந்தது.
இந்த நாவரும் வேறு மாநிலங்களின் லாட்டரி சீட் எண்ணை பேப்பரில் எழுதியும், இணையதளத்தின் வழியாகவும் விற்று பரிசு விழுவதாக மக்களை ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கருங்கல்பாளையம் பகுதியின் காவல் துறையினர் இவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து ஆறு விலை உயர்ந்த தொலைபேசிகள், நாற்பது கேரளா லாட்டரி சீட்கள், ஒரு மடிக்கணினி, இரண்டு கார்கள், ரூ.1.30 லட்சம் பணம் போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.